விபத்தில் ஐ.டி.ஐ. ஊழியர் பலி

விபத்தில் ஐ.டி.ஐ. ஊழியர் பலியானார்.

Update: 2023-01-18 19:03 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே உள்ள மலைப்பட்டியை சேர்ந்தவர் அஜய் கண்ணன் (வயது23). இவர் சாத்தூரில் உள்ள ஐ.டி.ஐ.யில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அஜய் கண்ணன் மோட்டார் சைக்கிளில் மலைபட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பாலவநத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அஜய் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்