அன்புஜோதி ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைப்பு

அன்புஜோதி ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. இணையதளத்தையும் போலீசார் முடக்கினர்.

Update: 2023-02-23 18:45 GMT

விழுப்புரம்:

குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் அடித்து துன்புறுத்தப்பட்டனர். மேலும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, சிலர் மாயமாகியுள்ளனர்.

இது தொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின் உள்பட 9 பேரை கெடார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கவேல் வழங்கிய ஆதாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ரத்தக்கறை படிந்த பாய்கள், இரும்புச்சங்கிலிகள், மூங்கில் பிரம்புகள், முத்திரைகள், மனநலம் பாதிக்கப்பட்டோர் உடுத்திய துணிமணிகள், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்தனர். இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் அறிவுரைப்படி அன்புஜோதி ஆசிரம இணையதளத்தை சைபர் கிரைம் போலீசார் தற்காலிகமாக முடக்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்