பழனி முருகன் கோவிலில் இத்தாலி நாட்டு பக்தர்கள் சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் இத்தாலி நாட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-13 21:19 GMT

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அந்த வகையில் இத்தாலி நாட்டை சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை பழனிக்கு வந்தனர். அப்போது அவர்கள் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு நடந்து சென்றனர். பின்னர் மலைக்கோவிலுக்கு சென்ற அவர்கள், அங்கு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். மேலும் தங்கரத புறப்பாட்டை பார்த்து ரசித்தனர். அப்போது புகைப்படம், வீடியோ எடுத்து அவர்கள் மகிழ்ந்தனர்.

இவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கேரளாவுக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இத்தாலி நாட்டினர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக பழனி முருகன் கோவிலுக்கு அவர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. பழனியில் சாமி தரிசனம் செய்த இத்தாலி நாட்டினர், பின்னர் அங்கிருந்து கோவை ஈஷா யோகா மையத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்