புதிய மாநில கல்விக்கொள்கையை உருவாக்க உறுதுணையாக இருக்கும்
மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துகள், புதிய மாநில கல்விக்கொள்கையை உருவாக்க உறுதுணையாக இருக்கும் என்று உயர்மட்ட குழு தலைவர் முருகேசன் பேசினார்.
கோவை
மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துகள், புதிய மாநில கல்விக்கொள்கையை உருவாக்க உறுதுணையாக இருக்கும் என்று உயர்மட்ட குழு தலைவர் முருகேசன் பேசினார்.
கருத்து கேட்பு கூட்டம்
மாநில கல்விக்கொள்கை தொடர்பாக கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவி லான கருத்து கேட்பு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக்குழு தலைவரும், டெல்லி ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியுமான முருகேசன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உறுதுணையாக இருக்கும்
தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுக்க மாணவர் கள், கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் என்று பலதரப்பட்டவர்களின் கருத்துகள் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழுவால் கேட்டு அறியப்படுகிறது.
அதன்படி மண்டல வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடை பெற்று வருகிறது.
5 மண்டலங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று முடிந்து உள்ளது. தற்போது கோவையில் 6-வது கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துகள் இந்த புதிய கல்விக்கொள்கையை உருவாக்க உறுதுணை யாக இருக்கும்.
எனவே மாணவர்களை வழிநடத்துவது, அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், கற்பிக்கும் முறைகள், பாடத் திட்டம், தேர்வு முறை மற்றும் ஆசிரியர்களுக்கான பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்பான கருத்துகளை கூறலாம்.
மாநில கல்வி கொள்கை
பல்வேறு தரப்பட்ட கல்வியாளர்களின் கருத்துகளை முழுமை யாக கேட்டு பரிந்துரையை வழங்க வேண்டும் என்பது தான் இந்த குழுவின் நோக்கம். ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்ற 12 உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற ஒரு குழு வேறு எந்த மாநிலத்திலும் அமைக்கப்பட வில்லை.
மாநிலத்திற்கு என்று தனியாக கல்விக்கொள்கை வேண்டும் என்று புதிய மாநில கல்விக்கொள்கையை உருவாக்க முதன் முதலாக குழுவை அமைத்தது தமிழக அரசுதான்.
இதை பல மாநிலங்கள் முன்மாதிரியாக கொண்டு உள்ளன. காலத்திற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள், ஆசிரியர்களின் பயிற்சிகள், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை முழுமையான நிலைத்த கல்வி கொள்கையாக இருக்க கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர், கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டார். அதில் பெரும்பாலான வர்கள் தமிழ்வழியில்தான் கல்விக்கொள்கையை உருவாக்க வேண்டும் என்று பலரும் கருத்துகளை தெரிவித்தனர்.
இதில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநில கல்விக் கொள்கை உறுப்பினர் செயலர் கருப்பசாமி, உறுப்பினர்கள் அருணா, ஜவஹர்நேசன், ராமானுஜம், திருப்பூர் துணை கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.