முத்தையாபுரத்தில் இன்று நடைபெற இருந்தவிவசாயிகள் போராட்டம் வாபஸ்:சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

முத்தையாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2023-08-23 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தாமிரபரணி பாசனம், ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைசியில் உள்ள கோரம்பள்ளம் குளத்தை மழைகாலம் தொடங்குவதற்கு முன்பாக தூர்வார வலியுறுத்தி, இன்று (வியாழக்கிழமை) முத்தையாபுரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று மாலையில் விவசாயிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்க தலைவர் என்.வி.பூபதி, செயலாளர் எஸ்.ரகுபதி, பொருளாளர் எஸ்.கே.எஸ்.கந்தசாமி, ஒருங்கிணைப்பாளர் ரா.ஜோதிமணி மற்றும் பலர் பங்கேற்றனர். அப்போது வருகிற ஆக. 26-ந்தேதி காலையில் குளத்தை ஆய்வு செய்வதாகவும், மறுநாள் காலை முதல் விவசாயிகளின் ஆலோசனைப்படி கோரம்பள்ளம் குளத்தை தூர்வாரும் பணி தொடங்கும் என கலெக்டர் உறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் சங்கத்தினர் இன்று ( (வியாழக்கிழமை) நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்