சாலை ஓரம் நிறுத்தியிருந்த லோடு வேனை திருடிய வாலிபர்கைது

சாலை ஓரம் நிறுத்தியிருந்த சரக்கு வேனை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-01 17:27 GMT

பள்ளிகொண்டா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி ஒரு சரக்கு வேன் வந்தது. அந்த வேன் ஆந்திர மாநில பதிவெண்கொண்டது என்பதால் சந்தேகத்தின்பேரில் வேனை நிறுத்த முயன்றனர்.

போலீசார் நிற்பதை பார்த்ததும் சற்று தூரத்திலேயே வேனை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம், குண்டு மல்லானூர் குப்பம் பகுதியை சேர்ந்த சிவகுமார் (வயது 31) என்பது தெரியவந்தது.

மேலும் மாதனுர் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேனை திருடி ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தார். மேலும் லோடு வேனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்