விருதுநகரில் 3 மையங்களில் நடந்தது

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வு விருதுநகரில் 3 மையங்களில் நடந்தது.

Update: 2022-09-10 19:17 GMT

விருதுநகரில் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக், செந்திக்குமாரநாடார் கல்லூரி, கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 7பி தேர்வு நடைபெற்றது. இதற்காக 9 கண்காணிப்பாளர்களும், 10 வீடியோ கிராபர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். மொத்தம் 2,594 பேர் எழுத வேண்டிய நிலையில் 1,384 பேர் தேர்வு எழுதினர். 1,210 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வு எழுதியவர்கள் 53 சதவீதம் பேர் ஆகும். 47 சதவீதம் பேர் தேர்வெழுதவரவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்