ஐ.டி. ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
ஐ.டி. ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டுபோனது
மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 38). இவர், பாண்டிக்கோவில் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று சென்னையில் உள்ள தனது மனைவியை பார்க்க சென்றார். மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம், வெள்ளி பொருட்கள், 4 கிராம் தங்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து கிருபாகரன் அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.