நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு எனச் சொல்வது தவறு"- பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன்
தேர்தல் நேரத்தில் விஜய் தேர்தலில் நின்றால் கூட்டணிக்கு அழைப்பு விடுப்போம் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
நெல்லை,
பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை அடைப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். தற்போது அடைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 'நாளைய முதல்வர்' என நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆசைப்படுவதில் தவறில்லை. தேர்தல் நேரத்தில் விஜய் தேர்தலில் நின்றால் கூட்டணிக்கு அழைப்பு விடுப்போம்.
பாஜக எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. பாஜக மதவாத கட்சி அல்ல. நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு எனச் சொல்வது தவறு. அரசியலுக்கு வருவது அவரவர்களுடைய விருப்பம்.
நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையைச் சேர்ந்தவர்களும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியல் இருக்கையில் அமர்ந்தபின்னர் அவர்களது திறமை வெளிப்படும். இவ்வாறு அவர் கூறினார்.