"பெண்களின் முன்னேற்றத்திற்கு சிந்தித்து செயலாற்றுவது திராவிட இயக்கம்தான்"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நகர்ப்புற சுய உதவிக் குழுக்கள் வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

Update: 2023-12-23 10:20 GMT

சென்னை,

சென்னையில் நகர்ப்புற சுய உதவிக் குழுக்கள் வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

"பெண்களின் முன்னேற்றத்திற்கு சிந்தித்து செயலாற்றுவது திராவிட இயக்கமும், அதன் தலைவர்களும்தான். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்கி பரிசளிக்க சட்டசபையில் வேண்டுகோள் வைத்தேன்.

தற்போது எனது வீட்டிலும், முதல்-அமைச்சர் இல்லத்திலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்களாகவே இருப்பது மகிழ்ச்சி தருகிறது." இவ்வாறு பேசினார்.  

Tags:    

மேலும் செய்திகள்