தேர்வு முடிவுகளில் தமிழை வெறுமனே மொழிப்பாடமென்று பதிவுசெய்திருப்பது கண்டனத்திற்குரியது - சீமான்

தேர்வு முடிவுகளில் தமிழை வெறுமனே மொழிப்பாடமென்று பதிவுசெய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.

Update: 2022-06-22 11:19 GMT

சென்னை,

10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று மட்டும் பதிவு செய்திருப்பதும் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று மட்டும் பதிவுசெய்திருப்பதும் கண்டனத்திற்குரியது.

'எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்' எனும் முழக்கத்தை முன்வைத்து ஆட்சியதிகாரத்துக்கு வந்த திராவிட ஆட்சியாளர்கள், தமிழை வளர்க்கும் இலட்சணம் இதுதான்! தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் இவர்களது திராவிட மாடல் ஆட்சி! வெட்கக்கேடு!" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்