முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓமந்தூரார் மருத்துவமனை செல்லவுள்ளதாக தகவல்

ஓமந்தூரார் மருத்துவமனை முன்பு போலீசார், சி.ஆர்.பி.எப். வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-06-14 02:47 GMT

சென்னை,

அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர், விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்கள் செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். ஓமந்தூரார் மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது சி.ஆர்.பி.எப். வீரர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓமந்தூர் மருத்துவமனையில் 6-வது மாடியிலுள்ள ஐசியூ வார்டில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்