இயற்கையையும், பிராணிகளையும் பாதுகாப்பது நம் கடமை

இயற்கையையும், பிராணிகளையும் பாதுகாப்பது நம் கடமை என்று மனித உரிமை கருத்தரங்கில் ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் பேசினார

Update: 2022-12-09 20:40 GMT

மதுரை சட்டக்கல்லூரியில் சட்டக்கல்வி இயக்ககம் சார்பில் மனித உரிமை மற்றும் நீதியின் சவால்கள் என்ற தேசிய கருத்தரங்கம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எஸ்.எம்.பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, மனித உரிமை என்பது மனிதர்களை மட்டுமல்லாது இயற்கையையும், பிற உயிர்களையும் பாதுகாப்பது நம் கடமை. மனிதர்களைப் போல பிற ஜீவராசிகளுக்கும், மரங்கள் செடி, கொடிகளுக்கும், இயற்கைக்கும் அனைத்தையும் பெற உரிமை உண்டு. ஒவ்வொருவரும் மனித உரிமையை காப்பது அவசியம் என்று பேசினார்.

பின்னர் கருத்தரங்கின் நோக்கம் குறித்து உதவி பேராசிரியர் முத்துக்குமார் எடுத்துரைத்தார்.

நன்றி உரையை இணை பேராசிரியர் பா.குமரன் தெரிவித்தபோது, நாம் ஒவ்வொருவரும் உரிமையை மட்டும் பார்க்காமல் கடமைகளையும் செய்ய வேண்டியது அவசியம் என்றார்.

நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா, மனித உரிமை அரசு வக்கீல் கணேஷ் பாபு மற்றும் பல விருந்தினர்கள் பங்கேற்று பேசினார்கள்.

பின்னர் நம்முடைய உரிமைகள் தொடர்பான கருத்தரங்கங்கள் மாலை வரை நடந்தன. மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்