விளைநிலங்களில் உழவார பணி மேற்கொள்வது அவசியம்

சம்பா சாகுபடி செய்யும் முன் விளைநிலங்களில் உழவார பணிகள் மேற்கொள்வது அவசியம் என்று விவசாயிகளுக்கு, வேளாண் உதவி இயக்குனர் எழில் ராஜா அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-09-01 18:45 GMT

கொள்ளிடம்:

சம்பா சாகுபடி செய்யும் முன் விளைநிலங்களில் உழவார பணிகள் மேற்கொள்வது அவசியம் என்று விவசாயிகளுக்கு, வேளாண் உதவி இயக்குனர் எழில் ராஜா அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உழவார பணிகள்

விவசாயிகள் தற்போது சம்பா சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். சம்பா சாகுபடி செய்வதற்கு முன்பு விளைநிலங்களில் உழவார பணிகளை மேற்கொள்வது அவசியம். உழவு பணிகளை மேற்கொள்ளும்போது, நிலங்களில் மேல்மண்ணை கீழாகவும், கீழ் மண்ணை மேலாகவும் ஆழ உழவு செய்ய வேண்டும். இதன் மூலம் மண்ணிற்கு காற்றோட்டம் கிடைக்கிறது. மேலும் மண்ணின் நீர் பிடிப்பு தன்மை அதிகரித்து மண்வளம் பெருகுகிறது. சாகுபடிக்கு உகந்த மண் காண்டம் என்பது மண்ணில் 25 சதவீதம் காற்று, 25 சதவீதம் ஈரப்பதம், 5 சதவீதம் அங்க பொருட்கள் என 45 சதவீதம் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

ஊட்டச்சத்துகள்

இதுபோன்று செய்வதனால் பயிர் வேர் வளர்ச்சி அதிகரித்து பயிர்கள் நன்றாக நிற்பதற்கும், பயிர் வளர்ச்சி மற்றும் தூர் கிளம்புவதற்கும், பூக்கள் அதிகமாக பூப்பதற்கும், பயிர்கள் செழுமையாக வளர்வதற்கும் வழி வகுக்கிறது. மேலும் கோடை பருவத்திற்கு பின் மழை பொழிந்தால் மண் அரிமாணத்தை தடை செய்கிறது.

கோடை உழவு செய்வதால் நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நம்மால் உண்டான ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் வேறு இடம் நகராமல் இருப்பதற்கு தடை செய்யப்படுகிறது.

நோய் தாக்குதல்

மேலும் கோடை உழவால் நிலத்தில் உள்ள பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலை ஏற்படுத்தும் பூஞ்சான வித்துக்களை அழிக்க கோடை உழவு சிறந்ததாக உள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் கோடை மழையை பயன்படுத்தி உழவு பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்