நத்தக்காடையூர் நகர பகுதிகளில் இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

நத்தக்காடையூர் நகர பகுதிகளில் இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Update: 2022-10-19 16:34 GMT

முத்தூர்‌,

நத்தக்காடையூர் நகர பகுதிகளில் இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

வானத்தில் கருமேகங்கள்

நத்தக்காடையூர், முள்ளிப்புரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், மருதுறை, பரஞ்சேர்வழி, பாப்பினி ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நத்தக்காடையூர் பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு இடி மின்னலுடன் பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டியது

இந்த மழையால் நத்தக்காடையூர் கடைவீதி, ஈரோடு சாலை, காங்கயம் சாலை, கண்ணபுரம் சாலை, திருப்பூர் சாலை, முத்தூர் சாலை ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தேங்கி நின்றது. மழை காரணமாக நத்தக்காடையூர் வாரச்சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. சந்தைக்கு வந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி காய்கறிகள், மளிகை சாமான்கள், கீரை வகைகளை வாங்கி சென்றனர்.

குளிர்ந்த காற்று

இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் நேற்று காலை அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பியவர்கள் சிரமம் அடைந்தனர். மழையால் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு வயல்களுக்கு போதிய ஈரப்பதம் கிடைத்துள்ளதால் நெல் நாற்று நடவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து குடிநீர் ஆதாரம் பாதுகாக்கப்படும் என்று விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்