ஐ.டி. நிறுவன பெண் ஊழியரிடம் 5 பவுன் நகை பறிப்பு

ஐ.டி. நிறுவன பெண் ஊழியரிடம் 5 பவுன் நகை பறிப்பு

Update: 2022-07-11 19:49 GMT

மதுரை

மதுரை சர்வேயர் காலனி பாண்டியன்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் தேவமுருகன். இவரது மனைவி சத்தியபிரியா(வயது 40), தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் வேலை முடிந்து சர்வேயர் காலனி வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் தலைகவசம் அணியாமல் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென சத்தியபிரியா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். உடனே அவர் இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், திருப்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அவர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்