திண்டிவனம், பிரம்மதேசம் போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

திண்டிவனம், பிரம்மதேசம் போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டது.

Update: 2022-09-09 17:19 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் உட்கோட்டத்தில் திண்டிவனம், பிரம்மதேசம் ஆகிய போலீஸ் நிலையங்கள் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் போலீசார், போலீஸ் நிலைய வளாகத்தையும், போலீஸ் நிலையத்தையும் சுத்தமாக பராமரித்ததோடு வழக்கு தொடர்பான ஆவணங்களையும் முறையாக பராமரித்தனர். இப்படி மற்ற போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்து சிறப்பாக செயல்பட்டதற்காக திண்டிவனம், பிரம்மதேசம் போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. மற்றும் கியூ.சி.ஐ. தரச்சான்று கிடைத்துள்ளது. இந்த தரச் சான்றிதழ்களை கியூ.சி.ஐ. தணிக்கையாளர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் வழங்கினார். அப்போது திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர். ஐ.எஸ்.ஓ மற்றும் கியூ.சி.ஐ. தரச்சான்று பெறுவதற்கு உறுதுணையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, சீனிபாபு மற்றும் போலீஸ் அலுவலர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்