இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-24 16:30 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூரில் உள்ள தனியார் பள்ளி இடத்தில் அரசு மகளிர் கலைக்கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அந்த பகுதி இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலைக்கல்லூரி கொண்டு வந்ததை வரவேற்கிறோம். ஆனால் தனியார் பள்ளி இடத்தில் கல்லூரி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என கோஷங்கள் எழுப்பினர். இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்