வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுகிறதா?- குப்பைகள் சாலையோரத்தில் குவிவதால் பொதுமக்கள் கேள்வி

வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டும் அவலம் உள்ளதால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுகிறதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

Update: 2022-12-08 18:45 GMT

ஆனைமலை

வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டும் அவலம் உள்ளதால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுகிறதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

பொதுமக்கள் அவதி

ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி உள்ளது. பேரூராட்சிக்கு உட்பட்ட சேத்துமடை, கோழிப்பண்ணை, தம்பம்பதி, தேவிபட்டணம் போன்ற பகுதிகளில் சுமார் 40,000 மக்கள் வசிக்கின்றனர் இவர்களிடமிருந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அதனை மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கவர், உடைந்த கண்ணாடி மற்றும் பாட்டில்கள் போன்றவற்றை மறுசுழற்சி செய்யவும் அனைத்து பேரூராட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து குப்பைகளை வாங்கி சேத்துமடை - ஆனைமலை சாலையில் இரு புறங்களிலும் மலை போல பிளாஸ்டிக் கழிவுகளும் வீட்டுக் கழிவுகளும் குவித்து தீ வைத்து எரிக்கின்றனர். மேலும் குப்பை கழிவுகளும் சாலையோரத்தில் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலாண்மை திட்டம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- சேத்துமடை, அண்ணாநகர், தேவிபட்டணம் செல்லும் வழித்தடங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மக்களிடமிருந்து தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி சாலையின் இருபுறங்களிலும் குவித்து தீ வைக்கின்றனர். மேலும் காய்கறி கழிவுகள் அதிகளவு தேங்குவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைக்கும்போது புகை படர்ந்து காற்று மாசடைவதோடு மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதியோர்களும், குழந்தைகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உரிய வகையில் செயல்படுத்துவதோடு, டிராக்டர் மூலம் குப்பை கிடங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்