வியாபாரி கடத்தலா? போலீஸ் விசாரணை

மேலப்பாளையத்தில் வியாபாரி கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-08 22:57 GMT

தென்காசி மாவட்டம் ஊத்துமலை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் ஜெயபால் (வயது 41). மாட்டு வியாபாரி. இவர் கடந்த 5-ந்தேதி நெல்லை மேலப்பாளையம் சந்தைக்கு வந்தார். சந்தை முடிந்த பின்னர் அவர் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து அவரது மனைவி ராமக்கனிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, வீட்டுக்கு வர நேரம் ஆகும் என்று கூறினாராம். ஆனால் அதன்பிறகு அவர் வீட்டுக்கு செல்லவில்லை. இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயபாலை யாரேனும் கடத்தி சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Tags:    

மேலும் செய்திகள்