முறையற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

முறையற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

Update: 2023-05-30 19:08 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட அளவிலான குடிநீர் வினியோகம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வட்டார அளவில் குடிநீர் தொடர்பான பிரச்சி னைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் இணைந்து தீர்வு காண வேண்டும். நெடுஞ்சாலைகளில் விரிவாக்க பணியின் போது உடைந்த குடிநீர் குழாய்களை மாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் சம்பந்தமான குறைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அரவக்குறிச்சி, க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்படுத்தப்படும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை 30.07.2023-க்குள் முடித்து தர வேண்டும். அதற்கான செயல் வடிவத்தை உரிய முறையில் தயாரித்து பணியினை நிறைவு செய்ய வேண்டும். முறையற்ற குடிநீர் இணைப்புகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவியுடன் உடனடியாக துண்டிப்பு செய்ய வேண்டும். கடவூர் வட்டாரத்திற்குட்பட்ட தேவர்மலை, முள்ளிப்பாடி பகுதியில் அதிக குடிநீர் பிரச்சனை உள்ளதால் அதனை உடனடியாக தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்