புதுச்சத்திரம் அருகே தனியார் நிறுவனத்தில் 700 கிலோ இரும்பு திருட்டு 6 பேர் கைது

புதுச்சத்திரம் அருகே தனியார் நிறுவனத்தில் 700 கிலோ இரும்பு திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2022-12-11 18:45 GMT


புதுச்சத்திரம், 

புதுச்சத்திரம் அருகே பூந்திரவள்ளியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தொழில்முறை ஆலோசகராக வண்ணாரப்பாளையம் மாருதி நகரை சேர்ந்த சுவாமி நாதன் என்பவர் உள்ளார். நேற்று மதியம் இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த நிறுவனத்தின் தெற்கு வாசல் அருகே 4 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர், 700 கிலோ இரும்பு பொருட்களை திருடிக் கொண்டு இருந்தனர்.

இதை பார்த்த சுவாமிநாதன் ஊழியர்கள் உதவியுடன், மடக்கி பிடித்து புதுச்சத்திரம் போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் விசாரித்ததில், கே.பாடி கவரை தெருவை சேர்ந்த ராஜீவ்(வயது 42), விருப்பாட்சி சுரேந்தர்(22), விக்னேஷ்(25), பெரியாண்டிக்குழி விஜயகுமார்(27), கரிக்குப்பம் விஜய்(21), சுப்பிரமணி(24) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரையும் கைது செய்து, இரும்பு பொருட்கள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்