மின்சாரம் தாக்கி இரும்பு கடை உரிமையாளர் பலி

மின்சாரம் தாக்கி இரும்பு கடை உரிமையாளர் பலி

Update: 2023-08-21 18:45 GMT

திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் தாக்கி இரும்பு கடை உரிமையாளர் பலியானார்.

பழைய இரும்பு கடை உரிமையாளர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன் கோட்டகம் வடபாதி முதலியார் தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது50). இவர் திருத்துறைப்பூண்டியில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். நேற்று காலை தனது வீட்டில் மின்மோட்டாரை தங்கராசு இயக்கினார். அப்போது எதிர்பாராவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தங்கராசு மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே தங்கராசு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விசாரணை

இதுகுறித்து தங்கராசு குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தங்கராசுவுக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்