இரும்பு கடை அதிபர் பலி

கார் கவிழ்ந்த விபத்தில் இரும்பு கடை அதிபர் பலியானார்.

Update: 2022-10-18 19:33 GMT

நெல்லை மேலப்பாளையம் கீழ் புதுச்சேரியை சேர்ந்தவர் அகமது கபீர் (வயது 49). இவர் சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் இரும்பு கடை நடத்தி வந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்துவிட்டு மதுரையில் உள்ள கடைக்கு சென்று பார்த்து வருவதற்காக மதுரைக்கு சென்றார். காரை சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார் (43) ஓட்டிச் சென்றார். மதுரை கடையை பார்த்து விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது விருதுநகர்-சாத்தூர் இடையே எட்டூர் வட்டம் சோதனை சாவடி அருகில் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில்மோதி கவிழ்ந்தது. இதில் ஜெயக்குமாரும், அகமது கபீரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு இரும்பு கடை அதிபர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அகமது கபீரின் சகோதரர் அஷ்ரப் அலி கொடுத்த புகாரின் பேரில் வச்சகாரப்பட்டி போலீசார் கார் டிரைவர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்