தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-07-27 22:50 GMT

ஈரோடு சூளை பகுதியில் நடந்து சென்ற ஒருவரிடம், 4 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் சூளை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 4 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், சூரம்பட்டி பகுதியை சேர்ந்த வில்சன் (வயது 19), சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியை சேர்ந்த கிருத்திக் (19), சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (19), சூரம்பட்டி நால்ரோடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (19) ஆகியோர் என்பதும், இவர்கள் 4 பேரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் என்பதும், இதில் வில்சன் மட்டும் தற்போது கல்லூரியில் படித்து வருவதும், மற்ற 3 பேரும் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் 4 பேரும் கோபி, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் 6-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளை திருடி விற்பனை செய்ததும், கத்தியை காட்டி வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 2 கத்தி, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1,000 பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்