கடல்வாழ் உயிரின பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களுக்கு சன்மானம்

கடல்வாழ் உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரகர் ஜினோ பிளஸ்ஸில் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-11-21 18:45 GMT

கடல்வாழ் உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரகர் ஜினோ பிளஸ்ஸில் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உயிர்க்கோள காப்பகம்

மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் 560 சதுரகிலோ மீட்டர் பரப்பு கொண்டது. இந்த காப்பகத்தில் 117 வகையான அரிய தாவரங்கள், உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்த உயிரினங்களை பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களில் மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்காவுக்கு உட்பட்ட பகுதிகளாகிய நடிப்பையூர், மூக்கையூர் மற்றும் கீழக்கரை பகுதிகளில் மீனவர்களின் வலைகளில் டால்பின் மற்றும் கடல் பசுக்கள் பிடிபட்டன. இந்த டால்பின் மற்றும் கடல் பசுக்களை மீனவர்களுடன் இணைந்து வனத்துறையினர் பத்திரமாக கடலில் விட்டனர்.

பாராட்டு

இதனை மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்காவின் வன உயிரினக் காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ ஆகியோர் பாராட்டினர். மேலும் இது போன்ற வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களை ஊக்குவிக்கும் விதமாக உரிய சன்மானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்