பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடந்து வருகிறது.

Update: 2022-06-29 18:54 GMT

வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 24). இந்தநிலையில் பிரியாவின் கணவர் விக்னேஷ் (28), விக்னேஷின் தாயார் சுமதி (54), விக்னேஷின் சகோதரி கிருத்திகா (21) ஆகியோர் சேர்ந்து பிரியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரியா கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், விக்னேஷ், சுமதி, கிருத்திகா ஆகிய 3 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்