சிறை வார்டர் செல்போனில் தொந்தரவு:நாமக்கல் கைதியின் மனைவியிடம் போலீசார் விசாரணை

Update: 2023-09-10 19:59 GMT

சேலம்

சிறை வார்டர் செல்போனில் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறப்பட்ட நாமக்கல் கைதியின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

செல்போனில் தொந்தரவு

நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் திருட்டு வழக்கில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கைதியை பார்க்க அவரது மனைவி அவ்வப்போது சிறைக்கு வந்த போது வார்டர் ஒருவர் பெண்ணின் செல்போன் எண்ணை பெற்று பிறகு செல்போனில் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து வார்டர் செல்போன் எண்ணின் 6 மாத அறிக்கையை சைபர் கிரைம் போலீசார் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புகார் கூறிய பெண்ணை நேரில் விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைப்பு விடுத்தனர். இதையடுத்து அந்த பெண் நேற்று சேலம் மத்திய சிறைக்கு விசாரணைக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அறிக்கை

இது குறித்து சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத்திடம் கேட்ட போது வார்டர் மீது புகார் கூறிய பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. சில எண்களை அந்த பெண் அழித்து உள்ளார். இருப்பினும் 2 செல்போன் எண்கள் மீது சந்தேகம் உள்ளது. அந்த எண்களின் விவரம் குறித்தும் சைபர் கிரைம் போலீசில் அறிக்கை கேட்டு உள்ளோம். அந்த அறிக்கை நாளை (இன்று) வந்து விடும். அதன் பிறகு மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்