ஜப்பானிய தொழில்நுட்பம் அறிமுகம்

தேனி அருகே அரசு பள்ளியில் ஜப்பானிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.

Update: 2022-11-18 19:00 GMT

தேனி அருகே அன்னஞ்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தேனி ஏ.டி.கே. மில் மூலம் '5எஸ்' என்று அழைக்கப்படும் ஜப்பான் நாட்டின் புதிய கலாசார தொழில்நுட்ப முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேவையற்றவற்றை அகற்றுதல், ஒழுங்குபடுத்துதல், ஆய்வு செய்து சுத்தம் செய்தல், நிலைப்படுத்துதல், ஒழுக்கத்தை கடைபிடித்தல் ஆகிய 5 முக்கிய அம்சங்களை கடைபிடிப்பது இந்த '5எஸ்' ஜப்பான் தொழில்நுட்ப முறை ஆகும். இந்த 5 வழிமுறைகளும் இந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் அவற்றை கடைபிடித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கோவையை சேர்ந்த ஜப்பானிய தர கருத்துக்களின் ஆலோசகர் மற்றும் தணிக்கையாளர் ராஜாகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் இந்த பள்ளி '5எஸ்' நடைமுறைப்படுத்தப்பட்ட பள்ளி என்று சான்று அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்