காசநோயை கண்டறியும் எக்ஸ்ரே வாகனம் அறிமுகம்
காசநோயை கண்டறியும் எக்ஸ்ரே வாகனம் அறிமுகம் செய்யபடுகிறது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நவீன நடமாடும் இலவச டிஜிட்டல் காசநோய் கண்டறியும் எக்ஸ்ரே வாகனத்தை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்திற்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழக அரசு நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் ஒன்றை வழங்கியது. இந்த நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் ஒரு மணி நேரத்தில் 10 எக்ஸ்ரே எடுக்கும் திறன் கொண்டது. மேலும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு வீடியோக்களை பொதுமக்களுக்கு ஓலிபரப்பும், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காச நோயாளிகளுக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகளை பரப்பவும் இந்த வாகனத்தில் அகல திரை தொலைக்காட்சி பொருத்தப்பட்டுள்ளது. இந்த நடமாடும் பிரிவு மூலம் காசநோய் கண்டறியும் சேவைகள் இன்னும் சென்றடையாத பகுதிகளுக்கு சென்றடையும். இந்த செயல்பாட்டை பயன்படுத்திக் கொண்டு காசநோய் இல்லாத கரூரை உருவாக்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும், என்றார்.