கவர்னர் மாளிகையில் பணிபுரியும் பாதுகாப்பு பிரிவு போலீசாருக்கு 'சபாரி' சீருடை அறிமுகம்

தலைமைச்செயலகம், கவர்னர் மாளிகையில் பணிபுரியும் பாதுகாப்பு பிரிவு போலீசாருக்கு ‘சபாரி’ சீருடை அறிமுகம்.

Update: 2022-06-22 18:52 GMT

சென்னை,

தமிழக போலீஸ் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதற்கு ஏற்ப வெவ்வேறு வடிவ-நிறத்தில் சீருடைகள் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன. சி.பி.சி.ஐ.டி., மத்திய குற்றப்பிரிவு, உளவுப்பிரிவு போன்ற பிரிவு போலீசார் சாதாரண உடையிலேயே பணியாற்றுகிறார்கள்.

தி.மு.க. அரசு அமைந்தவுடன் முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு 'ஹைடெக்'காக மாற்றப்பட்டது. இப்பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு கருப்பு நிற 'கூலர்' கண்ணாடி மற்றும் நவீன கருவிகள் வழங்கப்பட்டன. பெண் போலீசாருக்கும் 'சபாரி' சீருடை வழங்கப்பட்டது. அதே நேரத்தில் சென்னை தலைமை செயலகம், கவர்னர் மாளிகை போன்ற இடங்களில் பெண் போலீசார் சுடிதார், சேலையிலும், ஆண் போலீசார் சாதாரண உடையிலும் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஆண், பெண் போலீசாருக்கும் 'சபாரி' சீருடை வழங்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் பெண் போலீசார் 'சபாரி' சீருடையில் மிடுக்குடன் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்