ஆமைகளை பாதுகாக்க புதிய செயலி அறிமுகம்

ஆமைகளை பாதுகாக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வனச்சரக அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-27 18:45 GMT

வேதாரண்யம்:

கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் கூறுகையில், கோடியக்கரையில் அழிந்து வரும் இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1972-ம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளாக ஆமை முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஆமை குஞ்சுகளை கடலில் விடப்பட்டு வருகிறது.பருவநிலை மாற்றம் காரணமாகவும், கடற்கரையில் உள்ள சேற்றில் சிக்கியும், மீனவர் வலையும் சிக்கி முட்டையிட வரும் ஆமைகள் இறந்து வருகின்றன. அழிந்து வரும் ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்க வனத்துறையினர் மூலம் டுஹாங் என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதில் மீனவர்கள் மீன் பிடிக்கும் போது வலையில் ஆமைகள் சிக்கினால், அதனை எடுத்து கடலில் விடுவதை வீடியோ எடுத்து இந்த செயலில் பதிவிறக்கம் செய்தால் அவர்களுக்கு சிறப்பு பரிசு வனத்துறை மூலம் வழங்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்