போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட போதை வாலிபர்

குத்தாலம் போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட போதை வாலிபர் போலீசார் சொந்த பணத்தில் ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்

Update: 2022-10-16 18:45 GMT

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் வாலிபர் ஒருவர் போதையில் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து தகராறு செய்துள்ளார்.பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். போலீஸ் நிலைய வாசலில் தனது சட்டையை கழற்றி வீசி விட்டு உள்ளே சென்றார். அப்போது பணியில் இருந்த போலீசாரிடம் தகராறு செய்து ரகளையி்ல் ஈடுபட்டார். இதை தொடர்ந்து அந்த வாலிபரின் தாயாரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து அவருடன் அனுப்ப முயற்சி செய்தனர். ஆனால் அவர் செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் வேறு வழி இன்றி ஆட்டோவை வரவழைத்த போலீசார், தங்களது சொந்த பணத்தில் அந்த வாலிபரை ஆட்டோவை ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரகளையில் ஈடுபட்ட நபர் குத்தாலம் தோப்பு பகுதியை சேர்ந்த டிரைவர் என்பதும், சில மாதங்களுக்கு முன்பு இவரை குத்தாலம் போலீசார் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததாகவும் அங்கிருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்