கடனை திருப்பி கேட்டு தொழிலாளிக்கு மிரட்டல்; 3 பேருக்கு வலைவீச்சு

களக்காடு அருகே கடனை திருப்பி கேட்டு தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-07-31 19:49 GMT

களக்காடு:

களக்காடு கோவில்பத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் முத்துக்குமார் (வயது 38). இவர் ஓட்டலில் மாஸ்டராக உள்ளார். இவர் தனது குடும்ப செலவுக்காக நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் ரூ 5 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இதனை அவர் திரும்ப கொடுக்கவில்லை. இதனைதொடர்ந்து ஆனந்த் அவருக்கு போனில் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு முத்துக்குமார் பணம் தற்போது இல்லை, ஆனால் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துக்குமார் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆனந்த், புதுப்பேட்டை அரசடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பிச்சையா மகன் மகாராஜன் (20), புதுபேட்டை செக்கடியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் கேசவன் (23) ஆகியோர் பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்தனர். மேலும் அரிவாளை காட்டி கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி முத்துக்குமார் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி, இதுதொடர்பாக ஆனந்த் உள்பட மூவரையும் தேடி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்