ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நண்பனின் மனைவிக்கு பாலியல் தொல்லை... இளைஞருடன் சேர்த்து கணவனும் கைது

Update: 2022-06-16 07:07 GMT

சென்னை

சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற ஜோடிகள் போலீசாரிடம் தனது நண்பன் என் மனைவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அந்த வீடியோவை என் மனைவியிடம் காண்பித்து மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறி புகார் அளித்துள்ளார்

.இது குறித்து விசாரிப்பதற்காக அந்த இளம் ஜோடிகளை தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.மகளிர் போலீசார் இருவரையும் விசாரணை செய்தபோது அவர்கள் இருவரும் நேபாள மொழியில் பேசியதால் போலீசாருக்கு மொழி புரியாமல் விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் மொழி பெயர்ப்பாளரை வரவைத்து விசாரணையை தொடங்கினார். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

இளம் ஜோடிகள் இருவரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த காலித் ஹாசன் (வயது-24) அவரது மனைவி (14-வயது) சிறுமி என அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் கிடைத்தது. 14-வயது சிறுமியை பள்ளிக்கு செல்லும்போது ஆசை வார்த்தை கூறி காலித் ஹாசன் திருமணம் செய்து கொண்டார்.திருமணம் முடிந்த பிறகு எங்கு சென்று வாழ்க்கையை தொடங்குவது என்று நினைத்தபோது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தபரூக் ஹுசேன் (வயது28) என்ற நண்பர் சென்னை குரோம்பேட்டை துர்கா நகரில் தங்கி கட்டிட வேலை செய்து கொண்டிருப்பதால் அவரை தொடர்பு கொண்டு, என் மனைவியை அழைத்துக் கொண்டு நான் சென்னைக்கு வருவேன் என கூறிவிட்டு தம்பதிகள் இருவரும் ஏப்ரல் மாதம் சென்னைக்கு வந்து வந்துள்ளனர்.

ஒரே வீட்டில் இளம் தம்பதியும் அவரது நண்பரும் தங்கியுள்ளனர். பின்னர், நண்பர்கள் இருவரும் கட்டிட வேலைக்காக வேலைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு காலித் ஹாசன் வேலைக்கு தயாராகி அவரது நண்பரை அழைத்துள்ளார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தபரூக் ஹுசேன் வீட்டில் இருந்துள்ளார்.

அப்பொழுது வீட்டில் இருந்த 14-வயது சிறுமி குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது தபரூக் ஹுசேன் சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அந்த பெண்ணிடம் காட்டி, தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவேன் என்று கூறி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுபோன்று கடந்த 5 நாட்களாகவே தொடர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, தன் கணவரிடம் தெரிவித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதன்பிறகு போலீசார் தபரூக் ஹுசேன் என்பவரை கைது செய்து தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்க்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் காலித் ஹாசனுக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ள நிலையில், மீண்டும் ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தாக ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், போலீஸ் 14-வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்ற போர்வையில் சிறுமியின் வாழ்க்கை சீரழித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட காலித் ஹாசன் மற்றும் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தபரூக் ஹுசேன் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 14-வயது சிறுமியை போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்