கொரோனா பரவலை தடுக்க தயார் நிலை டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி

கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-08 23:18 GMT

சென்னை,

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 714-ல் இருந்து 5 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது. இது 41 சதவீதம் அதிகம் ஆகும். கேரளா, மராட்டியம், டெல்லி, கர்நாடகத்தில் நோய் தொற்று அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. இதை ஒப்பிடும்போது தமிழகத்தில் நோய் பரவல் குறைவானதுதான்.

இருப்பினும் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வதை காணமுடிகிறது. வரும் நாட்களில் இது 200 அல்லது அதற்கு மேல் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முறையாக கண்காணிக்கவில்லை என்றால், நோய் தொற்று மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

மாதிரிகள் சோதனை

ஸ்ரீபெரும்புதூர் நிறுவனத்தில் 245 பேருக்கு பரிசோதனை செய்ததில் 29 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கோவை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தினந்தோறும் தொற்று பதிவாகி வருகிறது. உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து வழிகாட்டு நடைமுறைகளின்படி மாதிரிகள் தொடர்ச்சியாக சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

நோய் அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை முடிவு வரும் வரையில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும். நோய் பரவலை தடுக்க சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்