கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல்

கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடந்தது.

Update: 2023-01-06 16:35 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் கடந்த 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை (7,8-ந்தேதி நீங்கலாக) நடக்கிறது. நேற்று 5-வது நாளாக தாசில்தார் சக்கரை தலைமையில் நேர்காணல் நடந்தது. இதனை கோட்டாட்சியர் மந்தாகினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம், வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன், தலைமையிடத்து துணை தாசில்தார் தனபால் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்