கிராம உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு
ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகாவில் உள்ள மோசூர், வணக்கம்பாடி, செம்பேடு, இசையனூர், கரிக்கந்தாங்கல், காவனூர், ஆணைமல்லூர், விளாபாக்கம் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கான கிராம உதவியாளர் பணிக்கு கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது.
அதில் தேர்வு பெற்ற 739 பேருக்கான நேர்முக தேர்வு ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நேர்முக தேர்வு தினமும் 100 பேர் வீதம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நேர்முக தேர்வில் கலந்து கொண்ட நபர்களுக்கு சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் தாசில்தார் சுரேஷ் முன்னிலையில் நடைபெற்றன.