கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு தொடங்கியது

கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு தொடங்கியது.

Update: 2022-12-14 18:51 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 135 விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகத்தில் நேற்று முதல் தொடங்கியது. மொத்தம் 8,725 விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 900 பேர் வீதம் நேர்காணல் நடத்த முடிவு செய்து தேர்வு நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று 900 பேர் வருகை தந்தனர். அவர்களிடம் 18 குழுக்கள் தேர்வினை நடத்தினர். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வருகிற 24-ந் தேதி வரை நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்