மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கு நேர்முக தேர்வு

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கு நேர்முக தேர்வு நடந்தது.

Update: 2022-09-21 16:47 GMT

வேலூர் மாவட்டத்தில் 40 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட 4,130 மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் பாதுகாவலர் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கு கூடுதலாக ரூ.1,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கூடுதலாக ரூ.1,000 நிதியுதவி வழங்கும்படி 171 பேர் மனு அளித்திருந்தனர். அவர்களுக்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். இதில், கண், காது, மூக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் குழுவினர் கலந்து கொண்டு, விண்ணப்பித்த நபர்கள் பராமரிக்கும் மற்றும் பாதுகாக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக உதவி தேவைப்படுகிறதா என்று பரிசோதனை செய்தனர். பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சரவணன், பாதுகாவலர்களுக்கு நேர்முக தேர்வ நடத்தினார். இதில், 162 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்