தி.மு.க.மகளிர் அணி, தொண்டரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்
தி.மு.க.மகளிர் அணி, தொண்டரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடந்தது.
தி.மு.க.மகளிர் அணி, தொண்டரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடந்தது.
தி.மு.க மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி மாவட்ட தலைவர், துணைத்தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்களின் நியமனத்திற்கான நேர்காணல் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., அறிவுறுத்தலின்படி நடந்த இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் நாமக்கல் ராணி, மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, மாநில மகளிர் பிரசார அணி துணைச் செயலாளர் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
இதில் வேலூர் மாவட்ட மகளிர் அணிக்காகவும், மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுக்காகவும் விண்ணப்பித்த பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.