மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகனம் பெற நேர்முக தேர்வு

மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகனம் பெற நேர்முக தேர்வு நடைபெற்றது.

Update: 2023-02-24 19:39 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் பெறுவதற்கான நேர்முகதேர்வு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் தலைமையில் எலும்பு முறிவு மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் கால்களை இழந்தவராகவும், 75 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும், மாற்றுத்திறனாளியான கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், சுய தொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்-அமைச்சரிடம் அளித்த மனுக்கள், மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுக்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 550 பேருக்கு கடிதம் மூலம் தகுதி தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து திரளான மாற்றுத்திறனாளிகள் இந்த தகுதி தேர்வில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்