ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடு
ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான ஏட்டு ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடு செய்வதாக கிராம மக்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்து உள்ளனர்.
சிவகங்கையை அடுத்த கண்ணாரிருப்பு கிராமத்தினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
கண்ணாரிருப்பு ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் புவனேஸ்வரி. இவருடைய கணவர் கண்ணன். இவர் போலீஸ் ஏட்டாக பணிபுரிகிறார். இந்த நிலையில் கண்ணன் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதுடன் அவரை பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு போடவும் செய்கிறார். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கண்ணன் கூறும் போது,
தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரு தரப்பினர் என் மனைவியை செயல்பட விடாமல் தடுக்கின்றனர். அத்துடன் அடிக்கடி என் மீது தவறான புகாரை கொடுக்கின்றனர். தற்போது அவர்கள் கொடுத்த புகார் உண்மைக்கு மாறானது என்றார்.