சர்வதேச எழுத்தறிவு தினம்

சர்வதேச எழுத்தறிவு தினம் நடைபெற்றது.

Update: 2022-09-17 18:45 GMT

காரைக்குடி,

தமிழகத்தில் நடப்பாண்டில் எழுத்தறிவு சதவீதம் 82.9 ஆக உள்ளது என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பேசினார்.

சர்வதேச எழுத்தறிவு தினம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில் சர்வதேச எழுத்தறிவு தினம் பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தலைமை தாங்கி பேசியதாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 10-ல் 2 பேர் மட்டும் கல்வியறிவு பெற்றிருந்தனர். தற்போது சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நடப்பாண்டு இந்தியாவில் எழுத்தறிவு சதவீதம் 77.7 ஆக உள்ளது.

தமிழகத்தின் எழுத்தறிவு சதவீதம் 82.9 இதில் ஆண்கள் 87.9 சதவீதமும், பெண்கள் 77.9 சதவீதமும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இந்தியாவில் உயர்கல்வியின் மொத்த சேர்க்கை 27.1 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் உயர்கல்வியின் மொத்த சேர்க்கை விகிதம் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக அதாவது 51.4 சதவீதமாக உள்ளது.

கல்வியறிவு

ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் 100 சதவீதம் எழுத்தறிவை பெற்றுள்ளனர். வடகொரியா, கியூபா போன்ற நாடுகள் விவசாயம், மருத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவதற்கு காரணம் கல்வியறிவு மட்டும் தான். உலகின் மிகப்பெரிய பணக்கார நாடுகளின் வரிசையில் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது. அதற்கு காரணம் அவர்களின் கடின உழைப்பும் தரமான கல்வி முறையும் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு முதன்மையர் நாராயணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். அழகப்பா பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை தலைவர் தனுஷ்கோடி வரவேற்றார். இதில், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி பயிற்றுநர் முத்துமாரி நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்