ஆத்தூர் சண்முகசுந்தரம் நாடார் பள்ளியில்உலகப்பெண் குழந்தைகள் தின விழா

ஆத்தூர் சண்முகசுந்தரம் நாடார் பள்ளியில்உலகப்பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-10-12 18:45 GMT

ஆறுமுகநேரி:

அரசு சமூக பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அமைப்பின் சார்பில் உலகப் பெண் குழந்தைகள் தின விழா ஆத்தூர் சண்முகசுந்தரம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக அதிகாரி கந்தசாமி தலைமை தாங்கினார்.

விழாவை முன்னிட்டு பள்ளியிலுள்ள பெண் குழந்தைகள் கேக் வெட்டி, தங்களது ஆசிரியர்கள் மற்றும் விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு வழங்கினர். மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் கென்னடி வரவேற்றுப் பேசினார். ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் செல்வி பிளாரன்ஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரி ஜேம்ஸ் அதிசயராஜ், பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்கள் மேம்பாட்டு இயக்குனரக இயக்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ்கமல், உதவி தலைவர் உதயகுமார், பள்ளி உதவி தலைமை ஆசிரியை பிருந்தா, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஜான்சன், ஜானகிராமன், வசந்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு குழந்தைகள் விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்