திருச்சியில் கனமழை: சென்னைக்கு திரும்பிய சர்வதேச விமானம்
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கனமழை காரணமாக சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
சென்னை:
திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு இண்டிகோ, ஸ்கூட், ஏர் ஏசியா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் சார்பில் வெளிநாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மாலை சிங்கப்பூரில் இருந்து 180 ஒரு பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது திருச்சி விமான நிலையம் பகுதியில் கனமழை பெய்த காரணத்தினால் இந்த விமானம் திருச்சியில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் அந்த விமானம் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து மழை குறைந்த பிறகு மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு இரவு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.