ரூ.72.42 கோடியில் விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 1,20,944 விவசாயிகளுக்கு ரூ.72.42 கோடி மதிப்பீட்டில் இடுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

Update: 2022-09-26 18:45 GMT

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 1,20,944 விவசாயிகளுக்கு ரூ.72.42 கோடி மதிப்பீட்டில் இடுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகளின் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வேளாண் நலத்திட்டங்கள் குறித்து வயல்களுக்கு கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த திட்டங்களின் பயன்கள் குறித்து விவசாயிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார்.

வெத்தலைக்காரன் பள்ளம் பகுதியில் 1.50 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை விதை பண்ணை, தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம், வயல்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்வேலி ஆகியவற்றை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தேவர் ஊத்துப்பள்ளம் பகுதியில் சூரிய சக்தியால் இயங்கும் சோலார் மோட்டார் பம்ப் செட், தொம்பரகாம்பட்டியில் நிழல் வலைக்குடில் அமைத்து வீரிய ரக காய்கறி மற்றும் பூச்செடிகள் உற்பத்தி செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இடுப்பொருட்கள்

அப்போது கலெக்டர் சாந்தி கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் அதிக அளவு சிறுதானியங்கள் சாகுபடி செய்வதால் சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு தர்மபுரி மாவட்டத்தை சிறுதானியங்கள் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்களுக்கு நல்ல விலை கிடைக்கும். விவசாயிகளுக்கும் அதிக வருவாய் கிடைக்கும். தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 1,20,944 விவசாயிகளுக்கு ரூ.72.42 கோடி மதிப்பீட்டில் வேளாண் இடுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன

இவ்வாறு அவர் கூறினார்

இந்த ஆய்வின் போது வேளாண் இணை இயக்குனர் முகமது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலினி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் குலசேகரன், தாசில்தார் பெருமாள் மற்றும் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்