கடன் தொகைக்கு வட்டி தள்ளுபடி

தாட்கோ மூலம் பெறப்பட்ட கடன் தொகைக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

Update: 2023-09-12 19:15 GMT

திருவாரூர்;

தாட்கோ மூலம் பெறப்பட்ட கடன் தொகைக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன் உதவி

தாட்கோ மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய கடன் உதவி திட்டத்தின்கீழ் கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் தொகையை ஒரே முறையில் செலுத்தி நேர்செய்து கடன் தொகை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளர் மூலம் வழங்கப்படும்.

டிசம்பர் 31-ந் தேதி வரை...

இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்படும். கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் திருவாரூர், நாகை பைபாஸ் சாலையில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்