62 பவுன் நகை கொள்ளை: தனிப்படையினர் கேரள போலீஸ் நிலையங்களில் தீவிர விசாரணை
62 பவுன் நகை கொள்ளை: தனிப்படையினர் கேரள போலீஸ் நிலையங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை:
62 பவுன் நகை கொள்ளை குறித்து
தனிப்படையினர் கேரள போலீஸ் நிலையங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மார்த்தாண்டம் சந்திப்பு மெயின் ரோட்டில் விரிகோட்டை சேர்ந்த ராஜ செல்வின் ராஜ் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இங்கு சம்பவத்தன்று இரவில் மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து 62 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் உள்பட 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். நகைக் கடையில் சேகரித்த கைரேகை பதிவுகளை குமரி- கேரள எல்லையோர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு கொண்டுசென்று அங்குள்ள பழைய குற்றவாளிகளின் ரேகைகளை ஒப்பிட்டு பார்த்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், மார்த்தாண்டம், களியக்காவிளை, பாறசாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.