நெல்லையில் தீவிர தூய்மை பணி

நெல்லையில் தீவிர தூய்மை பணி மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்

Update: 2022-06-11 21:50 GMT

நெல்லை:

நெல்லை மாநகராட்சி டவுன் நெல்லையப்பர் கோவில் 4 ரத வீதியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தின் மூலம் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாமினை மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து தூய்ைம பணி குறித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் 4 ரத வீதிகளிலும் சுத்தப்படுத்தும் பணி மும்முரமாக நடந்தது. நிகழ்ச்சியில் துணைமேயர் கே.ஆர்.ராஜு, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் உலகநாதன், ராமகிருஷ்ணன், சந்திரசேகர், சுகாதார அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நெல்லை சந்திப்பு கைலாசபுரம் பள்ளிக்கூடத்தில் நடந்த மருத்துவ முகாமை மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கவுன்சிலர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நெல்லை சந்திப்பு கைலாசபுரம் பள்ளிவாசல் அருகில் குப்பைகள் தேங்கி கிடப்பதை பார்த்து அதை உடனே அகற்ற நடவடிக்கை எடுப்பதாக மேயர், துணை மேயர் கூறினர்.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் வருகிற ஜூலை மாதம் நடக்கிறது. இதையொட்டி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பேசினார். துணை மேயர் கே.ஆர்.ராஜு, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழாவுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவதால் கோவிலில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். பக்தர்களுக்கு தரமான குடிநீர் வழங்குவது. நடமாடும் கழிப்பறை வசதி செய்து கொடுப்பது. போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவது. கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிப்பது. கண்காணிப்பு கேமரா பொருத்துவது, என்று முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் அறநிலையத் துறை உதவி ஆணையாளர் கவிதா, போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், செயற்பொறியாளர் நாராயணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன், கோவில் செயல் அலுவலர் சிவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்